நீராவியடி விவகாரம்: சதா கலாமும் அறிக்கை மட்டும் விடும் ரெலோ ஆர்ப்பாட்ட பேரணிக்கு அழைப்பு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, October 1, 2019

நீராவியடி விவகாரம்: சதா கலாமும் அறிக்கை மட்டும் விடும் ரெலோ ஆர்ப்பாட்ட பேரணிக்கு அழைப்பு

முல்லைத்தீவு நீதிமன்றத்தின் கட்டளையை அவமதித்து சட்டத்தை கையில் எடுத்த ஞானசார தேரர் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி யாழில் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த பேரணி எதிர்வரும் 5ஆம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு யாழில் முன்னெடுக்கப்படவுள்ளது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ். மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக இடம்பெறவுள்ள இப்போராட்டத்தில் பேதங்களின்றி அனைவரையும் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நீராவிடியடி கோயிலில் இடம்பெற்ற அநீதி தொடர்பாக நீதிகோரி முன்னெடுக்கப்படுகின்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணி எந்தவித கட்சி அரசியலையும் கலக்காமல் ஒன்றுபட்ட தமிழினத்தின் உணர்வலைகளை ஸ்ரீலங்கா அரசுக்கு உணர்த்தும் வகையில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்து நீதிகோரும் குரல்கள் பேரலையாக எழுவதை உறுதிப்படுத்த முன்வருமாறு யாழ். மாவட்டத்தில் செயற்படும் சகல சமய, சமூக, பொது அமைப்புக்களையும் தொழிற்சங்கங்கள், வர்த்தக சங்கங்கள் மற்றும் யாழ். பல்கலைக்கழக சமூகம் உட்பட அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தினதும் ஆதரவையும் பங்களிப்பையும் இந்த போராட்டத்தில் தாம் நாடி நிற்பதாகவும் கட்சியின் மாவட்டக் கிளைச் செயலாளர் தெரிவித்துள்ளர்.