சொந்த மாப்பிள்ளையை உதறி தள்ளிய கருணாநிதியின் மகள்.. அடுத்தடுத்து வெளியான முக்கிய தகவல் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, October 22, 2019

சொந்த மாப்பிள்ளையை உதறி தள்ளிய கருணாநிதியின் மகள்.. அடுத்தடுத்து வெளியான முக்கிய தகவல்

பணமோசடி வழக்கில் சிக்கிய தனது மாப்பிள்ளை ஜோதிமணியின் மீதான சட்ட நடவடிக்கைகளுக்கு, எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டோம் என கருணாநிதியின் மகள் செல்வி கூறியுள்ளார்.கருணாநிதியின் மகளும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் தங்கையுமான செல்வி - முரசொலி செல்வம் ஆகியோரின் ஒரே மகள் டாக்டர் எழிலரசி. இவரின் கணவர் ஜோதிமணி.

இந்நிலையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 100 ரூபாய் நோட்டுக்களைப் பெற்றுக் கொண்டு, 500 மற்றும் 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாகக் கொடுத்தால் 2 சதவீதம் கமிசன் கொடுப்பதாக சென்னை நீலாங்கரையில் கடந்த வாரம் ஒரு மோசடி நடந்தது.

இதில் பாதிக்கப்பட்ட வேப்பேரியைச் சேர்ந்த அலங்காரப் பொருட்கள் வியாபாரி தினேஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் டாக்டர் ஜோதிமணி உட்பட 6 பேரிடம் பொலிசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஜோதிமணியிடம் பொலிசார் விசாரணை நடத்திய போது தான் அவர் கருணாநிதியின் மகள் செல்வியின் மருமகன் என தெரியவந்தது.

பறிகொடுத்த பணத்தைத் தருவதாக ஜோதிமணி தரப்பில் ஒப்புக்கொண்டபிறகு, இந்த வழக்கில் யாரையும் கைதுசெய்யாமல் விடுவித்தது காவல்துறை.

அவர் பெரிய இடத்து ஆள் என்பதால் தான் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என விமர்சிக்கப்பட்டது.


இந்நிலையில் செல்வியும் அவர் கணவர் செல்வமும் அதிரடியாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அதில், எங்கள் மருமகன் ஜோதிமணியின் எந்த செயல்களுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே அவற்றுக்கு நாங்கள் பொறுப்பில்லை என தெரிவித்துள்ளனர்.