மின்னேரியாவில் கோர விபத்தில் சிக்கிய மட்டக்களப்பு கொழும்பு பேருந்துகள் – ஒருவர் உயிரிழப்பு , 40 பேர் படுகாயம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, October 24, 2019

மின்னேரியாவில் கோர விபத்தில் சிக்கிய மட்டக்களப்பு கொழும்பு பேருந்துகள் – ஒருவர் உயிரிழப்பு , 40 பேர் படுகாயம்

மின்னேரியாவில் சற்றுமுன்னர் ஏற்பட்ட கோர விபத்தில் ஒருவர் பலியானதுடன் 43பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த அரச பேருந்தும் கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்தக் கோர விபத்து ஏற்பட்டுள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து அதிகாலை 3.30 இல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் ஒருவர் பலியானதுடன் 43பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
களத்திற்கு விரைந்த மின்னேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்