தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்த சந்தேகத்தில் மலேசியா நாடாளுமன்ற உறுப்பினர்களான மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன், சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் உட்பட எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலாக்கா, நெகிரி செம்பிலான், கெடா, கோலாலம்பூர், சிலாங்கூர் மற்றும் பேராவில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மலாக்கா, நெகிரி செம்பிலான், கெடா, பேராக் மற்றும் கோலாலம்பூரில் தலா ஒருவரும் சிலாங்கூரில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
மலேசிய நேரப்படி இன்று காலை 9 மணியளவில், புக்கிட் அமானை சேர்ந்த பெலிஸ் குழுவினர் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் இல்லத்திற்குச் சென்று அவரை கைது செய்துள்ளனர்
2012ஆம் ஆண்டின் பாதுகாப்புக் குற்றங்கள் மற்றும் சிறப்பு நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.