அவசியம் ஸ்கிப்பிங் செய்ய வேண்டும் என்பதற்கான 5 காரணங்கள் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, October 9, 2019

அவசியம் ஸ்கிப்பிங் செய்ய வேண்டும் என்பதற்கான 5 காரணங்கள்

அன்றாடம் உடற்பயிற்சி செய்வது மிகவும் சிறந்தது என்று காலாகாலமாக கேள்விப்பட்டிருப்பீர்கள்.

எனினும் இதற்காக பெரிய அளவில் செலவு செய்ய வேண்டியதில்லை.
வீட்டிலேயே பணச் செலவின்றி செய்யக்கூடிய ஏராளமான உடற்பயிற்சிகள் காணப்படுகின்றன.
அவற்றில் ஸ்கிப்பிங்கும் ஒன்று. இதற்கு ஒன்றரை அல்லது இரண்டு மீற்றர் வரையான கயிறு ஒன்று மாத்திரம் இருந்தாலே போதுமானது.
பின்வரும் 5 காரணங்களுக்காக அன்றாடம் ஸ்கிப்பிங் செய்வது அவசியம் ஆகும்.
உடல் உறுப்புக்களை ஒருங்கிணைக்க கூடியது
அதாவது ஸ்கிப்பிங் செய்யும்போது கண்கள், பாதங்கள் மற்றும் கைகள் என்பன ஒன்றாக வேலை செய்கின்றன.
அதேவேளை கயிற்றின் அசைவுகளை கால்களுக்கு இடையில் சிக்காதவாறு மூளையானது கண்காணிக்கின்றது.
எனவே குறித்த உடல் உறுப்புக்கள் ஒன்றாக சிறந்த முறையில் செயற்படும் ஆற்றலை பெறுகின்றன.
அறிவாற்றலை மேம்படுத்துதல்
கயிறு அசைவதை அவதானிக்கும்போது மூளையானது புதிய இயக்கப்பொறிமுறை பற்றி அறிந்துகொள்கின்றது.
இது நரம்புகளுக்கும், மூளைக்கும் இடையிலான தொடர்பாடலை அதிகரிக்கக்கூடியதாக இருக்கின்றது.
கலோரிகளை எரித்தல்
ஸ்கிப்பிங் மூலம் உடலின் பல பாகங்கள் ஒரே நேரத்தில் அசைகின்றன.
இதனால் உடல் முழுவதும் உள்ள கலோரிகள் எரிக்கப்படுவதுடன், தசைகளும் சிறப்பான செயற்பாட்டினை பெறுகின்றன.
அதேநேரம் கட்டுமஸ்தான தசைகளை உருவாக்குவதற்கும் இது உதவுகின்றது.
பாதங்கள் மற்றும் கணுக்காலில் காயங்கள் ஏற்படுவதை தடுக்கின்றது
ஸ்கிப்பிங்கின்போது கால்களில் உள்ள எலும்புகள் மற்றும் தசைகள் வலிமை பெறுகின்றன.
இது நாளடைவில் கீழ்க் கால் பகுதிகளில் காயங்கள் ஏற்படுவதை தடுப்பதற்கு ஏதுவாக இருக்கின்றது.
தவிர உடலின் சமநிலையைச் சிறப்பாக பேணுவதற்கும் பயன்படுகின்றது.
எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கின்றது
தொடர்ச்சியாக ஸ்கிப்பிங் செய்யும்போது எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கின்றது.
இதன் ஊடாகவே எலும்பின் வலிமையும் அதிகரிக்கின்றது.
அத்துடன் தசைகள் சிறந்த மீள்தன்மை கொண்டதாகவும் மாறுகின்றன.
எச்சரிக்கை

மூட்டுவலி மற்றும் முழங்கால் வலி உள்ளவர்கள் ஸ்கிப்பிங் செய்வதை தவிர்க்க வேண்டும்.