கோட்டா சொன்ன கணக்கு 13784; புனர்வாழ்வு ஆணையாளரின் கணக்கு10790: சரணடைந்த பின்னரும் 2994 பேர் மாயமா? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, October 17, 2019

கோட்டா சொன்ன கணக்கு 13784; புனர்வாழ்வு ஆணையாளரின் கணக்கு10790: சரணடைந்த பின்னரும் 2994 பேர் மாயமா?

யுத்தத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகளின் எண்ணிக்கையென கோட்டாபய அறிவித்த எண்ணிக்கைக்கும், புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் வெளியிட்ட எண்ணிக்கைக்குமிடையில் பெரும் வித்தியாசமிருப்பது அம்பலமாகியுள்ளது. இரண்டு தரப்பும் வெளியிட்ட குழப்பமான தகவல்களின் மூலம், சரணடைந்து புனர்வாழ்வு முகாமிற்கு கொண்டு வந்த பின்னரும் பெருமளவானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்களா என்ற கேள்வியெழுந்துள்ளது.

கொழும்பு ஊடகமொன்று தகவலறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் எழுப்பியிருந்த கேள்வியில் இந்த விவகாரங்கள் அம்பலமாகியுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் நேற்று முன்தினம் (15) கொழும்பிபு சங்கரில்லா ஹோட்டலில் கோட்டாபய ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியிருந்தார்.

இதன்போது, காணாமல் போனவர்கள் பற்றி இந்திய பெண் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பியபோது, 13784 பேர் இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்ததாக தெரிவித்திருந்தார். எனினும், அண்மையில் கொழும்பு தமிழ் ஊடகமொன்று புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்திடம் சரணடைந்தவர்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, 10790 பேர் சரணடைந்ததாக தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இரண்டு தரப்பின் எண்ணிக்கைக்குமிடையில் 2994 பேர் வித்தியாசப்படுகிறார்கள்.

அப்படியானால் அவர்களிற்கு என்ன நடந்தது என்ற கேள்வியெழுந்துள்ளது.