யாழின் இருவேறு இடங்களில் வாள்களுடன் சென்ற குழு தாக்குதல் - ஐவர் வைத்தியசாலையில் அனுமதி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, September 16, 2019

யாழின் இருவேறு இடங்களில் வாள்களுடன் சென்ற குழு தாக்குதல் - ஐவர் வைத்தியசாலையில் அனுமதி!

யாழ்ப்பாணத்தில் இரு வேறு இடங்களில் மர்மக்குழுவின் தாக்குதல்களினால் ஐந்து பேர் படுகாயமடைந்த நிலயில் சொத்துக்களுக்கும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்குள் முகங்களை மூடியவாறு சென்ற ஆறுபேர் கொண்ட கும்பல் வீட்டிலிருந்து பொருட்களை அடித்து நொருக்கியதோடு வீட்டிலிருந்த வயோதிபத் தம்பதியினர் மீதும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இந்நிலையில் படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த ரவீந்திரன் வயது 70 செல்வராசாத்தி வயது 65 ஆகியோரே படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை அரியாலை ஆனந்தம் வடலி வீதியில் உள்ள வீடொன்றிற்குள்நேற்று இரவு புகுந்த மர்மக்குழு வீட்டினை சேதப்படுத்தியதோடு வீட்டியிலிருந்தவர்களையும் தாக்கியுள்ளனர்.

இரு மோட்டார் சைக்கிள்களில் சென்ற ஆறுபேர் கொண்ட கும்பலே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.



முகங்களை மூடியவாறு சென்ற குறித்த மர்மக்குழு வாள் மற்றும் இரும்புக் கம்பிகளால் வீட்டியிலிருந்தவர்களை தாக்கியுள்ளது.

இதில் படுகாயமடைந்த மூன்றுபேர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இந்தச் சம்வங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளைஇன்றைய தினம் யாழில் எழுக தமிழ் பேரணி இடம்பெறவிருந்த நிலையில் மக்கள் மத்தியிஒல் பீதியை ஏற்படுத்தும் முகமாக நேற்றிரவு இந்த தாக்குதல் சம்பங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.