தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை முன்னிறுத்தி யாழில் தமிழ் மக்கள் பேரவையால் முன்னெடுக்கப்பட்டுள்ள எழுக தமிழ் பேரணியில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் , மாணவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் , பிஞ்சுக்குழந்தைகள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில் எழுக தமிழ் பேரணியில் தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனும் கலந்து கொண்டுள்ள நிலையில், கிளிநொச்சி மாவட்ட தமிழ் அரசுக்கட்சி அணியும் எழுக தமிழ் பேரணியில் கலந்து கொண்டிருந்தது.
இதேவேளை தமிழ் அரசுக்கட்சியின் சுமந்திரன் ஆதரவு அணி, ஐ.தே.க ஆதரவாளர்களாக மாறி, சமூக வலைத்தளங்களில் தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்படும் இந்த போராட்டத்திறகு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ் தேசிய உணர்வுடன் பயணிக்கும் தமிழ் அரசு கட்சியின் ஒரு பகுதியினர் இந்த போராட்டத்தில் பங்கு கொண்டிருப்பது, ஐ.தே.க ஆதரவு நிலையெடுக்கும் கட்சிக்கு தெளிவான செய்தியை சொல்வதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.