மட்டக்களப்பு சிவானந்த மைதானத்தில் மென் பந்து கிரிக்கட் போட்டி திருகோணமலை பாடசாலையும் அணிக்கும் சிவானந்தா கல்லூரி அணிக்கும் இடையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த போட்டியில் சிவானந்தா கல்லூரி வெற்றி கிண்ணத்தை தனதாக்கியது.
இந்நிலையில் வெற்றி அடைந்த மகிழ்ச்சியில் வீதி உலா வருவதற்கு சிவானந்த அணியினரும் ,கல்லடி இளைஞர்களும் இணைந்து ஆயத்தங்களை முன்னேடுக்க தயாரான நிலையில் மைதானத்தினுள் நுழைந்த காத்தான்குடி பொலிஸ் அதிகாரிகள் இளைஞர்களை மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளனர்.
இதேவேளை மைதானத்தில் இருந்த சிவானந்தா கல்லூரி அதிபர் பொலிஸாரின் அராஜகத்தை கண்டிக்கவோ தட்டிக்கேட்கவோ இல்லையென பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் இளைஞர்கள் மீது பொலிசார் தாகுதல் மேற்கொண்டமைக்கு எவ் வித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை எனவும் சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
காலையில் மைதானத்தை அலங்கரித்து போட்டியை ஆர்வமாக நடைபெற உதவியாக இருந்த இளைஞர்கள் தாக்குதலுக்கு உள்ளானபோது சிவானந்தா நடவடிக்கை எடுக்காமல் இருந்தமை கண்டித்தக்கப்பட வேண்டிய விடயம் என பலரும் கூறியுள்ளனர்.
அதிபரின் இந்த மனைதாபிமானமற்ற செயலால் தாம் மிகவும் மன வேதனை அடைந்துள்ளதாக மாணவர்களும் அங்கு நின்ற இளைஞர்களும் கூறியுள்ளார்கள்.
அத்துடன் நாங்கள் அரசியல் கொடியோ, தேர்தல் பிரச்சாரமோ செய்யவில்லை என்றும் எங்கள் வெற்றி கிண்ணத்தை ஏந்தி வீதி உலா வர இருந்தமை தவறா எனவும் பாதிக்கபட்ட இளைஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எந்த விளையாட்டிலும் வெற்றி பெற்றால் மைதானத்தில் அந்த மகிழ்ச்சியினை கொண்டாடுவது வழமை.
இந்த நிலையில் காத்தான் குடி பொலிஸார் அப்பாவி இளைஞர்கள் மீது மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கைக்கு நீதி கிடைக்குமா...என சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது