திருடிவிட்டு தப்பி ஓடியவர் கிணற்றில் விழுந்து சாவு!! -யாழில் சம்பவம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, September 24, 2019

திருடிவிட்டு தப்பி ஓடியவர் கிணற்றில் விழுந்து சாவு!! -யாழில் சம்பவம்

யாழ்ப்பாண நகரப் பகுதியில் வீடொன்றில் திருட்டில் ஈடுபட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிய திருடன் தவறி கிணற்றுக்குள் விழுந்து சாவடைந்துள்ளார். 

அந்த திருடன் கிணற்றுக்குள் வீழ்ந்தவுடன் அவல சத்தம் எதுவும் போடாமல் இருந்துள்ளார். இருந்த போதும் கிணற்றுக்குள் திருடன் விழுந்த சத்தம் கேட்டதையடுத்து கிணற்றைச் சென்று பார்த்த வீட்டு உரிமையாளர் அவர் அயல் வீட்டில் திருட முற்பட்டார் என்பதை அறிந்து கொண்டுள்ளார். 

இதனால் உடனடியாக அவரை மீட்காமல் யாழ்.பொலிஸாரை அழைத்துவரச் சென்றுள்ளார். எனினும் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் செல்ல தாமதித்ததனால் கிணற்றுக்குள் வீழ்ந்தவர் உயரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை வேளை யாழ்ப்பாணத்தில் உள்ள ஈ.பி.டி.பி கட்சி அலுவலகம் அமைந்துள்ள சிறிதர் தியேட்டருக்கு பின்புறமாக இடம்பெற்றது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்படாத நிலையில் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது