சஹ்ரான் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் வெடிபொருட்கள் சில அம்பாறையில் மீட்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, September 18, 2019

சஹ்ரான் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் வெடிபொருட்கள் சில அம்பாறையில் மீட்பு!

அம்பாறை – பாலமுனை பகுதியில் இருந்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்கான மெகசின் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வெடிபொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் சில பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலினை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே அவை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வெடிபொருட்கள் ஈஸ்டர் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் பயன்படுத்தியதாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இதுகுறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.