மின் காற்றாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் – களத்திற்கு ஆளுநர் விஜயம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, September 18, 2019

மின் காற்றாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் – களத்திற்கு ஆளுநர் விஜயம்

யாழ்ப்பாணம் – மறவன்புலவு பகுதியில் மக்கள் குடியேற்றத்திற்கு அண்மையில் மின் காற்றாலை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டம் மறவன்புலவு மக்களினால் இன்று (புதன்கிழமை) கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சரின் அலுவலகத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனின் மக்கள் சந்திப்பு கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்றுவரும் நிலையில், இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதனையடுத்து போராட்டக் களத்திற்கு விரைந்த ஆளுநர், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

அதன் பின்னர் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலாளரை உடனடியாக வருகை தருமாறு உத்தரவிட்டுள்ளார்.

அத்தோடு போராட்டக்காரர்களின் 5 பேரை தன்னுடனான சந்திப்பில் கலந்துகொள்ளுமாறும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.