சட்டீஸ்கர் மாநிலம் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது.
சட்டீஸ்கர் மாநிலத்தில் காஸ்ரண்டா – துமாபால் ஆகிய கிராமங்களுக்கு இடையில் தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது.
இந்த பணிக்காக டீசல் நிரப்பப்பட்ட, ராங்கர் லொறியொன்றும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த லொறியிலேயே மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு வைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில் லொறியில் பணியாற்றிய மூன்று ஊழியர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.