வடமராட்சி கப்பூதுவெளி பற்றைக் காட்டுக்குள் நள்ளிரவில் மேற்கொள்ளப்பட்ட கசிப்பு உற்பத்தி காவல்துறை சிறப்பு பிரிவினரால் முறியடிக்கப்பட்டுள்ளது.
கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கரவெட்டியைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
985 லீற்றர் கோடா, 2 லீற்றர் கசிப்பு, கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 5 பரல்கள் என்பன கைப்பற்றப்பட்டன
இதையடுத்து சான்றுப்பொருள்களுடன் சந்தேகநபர் நெல்லியடிப் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
காங்கேசன்துறை பிராந்தியத்துக்கு பொறுப்பான மூத்த காவல்துறை அத்தியட்சகர் உத்தரவில் அவரின் கீழான சிறப்பு கொவல்துறை பிரிவே இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது.