யாழ்ப்பாணம் இலங்கையின் கலாசார பூமி: நல்லூரே தமிழரின் கேந்திரம் – யாழில் ரணில் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, September 7, 2019

யாழ்ப்பாணம் இலங்கையின் கலாசார பூமி: நல்லூரே தமிழரின் கேந்திரம் – யாழில் ரணில்எமது நாட்டின் கலாசார வரலாற்றில் யாழ்ப்பாணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக இருக்கின்றது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் நல்லூர் நகரமே தமிழ் மக்களுக்கு கேந்திர பிரதேசமாக பிரதேசமாக இருக்கின்றது எனத் தெரிவித்துள்ள அவர், இந்த மாநகரத்தை போற்றத்தக்க வகையில் கட்டியெழுப்பவுள்ளதாக தெரிவித்தார்.

யாழ்ப்பாண நகர மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் இன்று (சனிக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தெரிவிக்கையில், “குறிப்பாக வடக்கிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கி அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருகின்ற அதே நேரத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வை காண்பதற்கான முயற்சிகளையும் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு உட்பட வடக்கில் முன்னெடுக்கும் அபிவிருத்தி திட்டங்களுக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி எங்களுடன் கைகோர்த்துக் கொள்ளுங்கள்.

எமது நாட்டின் கலாசாரத்தைப பொறுத்தமட்டில் யாழ்ப்பாணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கலாசார பூமியாக இருக்கின்றது. நல்லூர் நகரம் தான் தமிழ் மக்களின் கேந்திர பிரதேசமாக இருக்கின்றது.

ஆகவே அந்த மாளிகையில் சிதைவடைந்த பகுதிகளை நாங்கள் இப்பொழுதும் காணக்கூடியதாக இருக்கின்றது. எனவே அமைச்சர் தயாரித்து சமர்ப்பித்துள்ள திட்டத்தின் படி கட்டாயமாக நாங்கள் இந்த மாநகரத்தை கட்டியெழுப்புவோம்.

மேலும் இத்தகைய அபவிருத்திகளுக்கு இந்திய அரசாங்கம் வழங்கிய நிதி நன்கொடைக்கும் நன்றி கூற வேண்டும். அடுத்ததாக கலாசார மத்திய நிலையத்தை அமைக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறுகிறேன். அதே சந்தர்ப்பத்தில் இந்த நகர மண்டபத்தை நாங்கள் கட்டாயமாகக் கட்டியெழுப்புவோம்.

அதேபோல் சந்தைத் தொகுதி கட்டுமான நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். நெடுந்தூர பயணிகளுக்கான கட்டடப் பணிகள் பூர்த்தி செய்யும் தருவாயில் உள்ளது அதனையும் நாங்கள் பூர்த்தி செய்வோம்.

குறிப்பாக இங்கு நகர பிதா கூறியிருப்பது போல கட்டட வடிவமைப்பின் படி கட்டடத்தை அமைப்போம் என்பதையும் உறுதியாக சொல்ல விரும்புகிறேன். அதனூடாகத் தான் புதிய யாழ்ப்பாணத்தை எங்களால் கட்டியெழுப்ப முடியும்” என்று தெரிவித்தார்.