கோத்தாவின் கைக்கூலிகளால் ஏமாற்றப்பட்ட கிளிநொச்சி மக்கள் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, September 29, 2019

கோத்தாவின் கைக்கூலிகளால் ஏமாற்றப்பட்ட கிளிநொச்சி மக்கள்

கோத்தபாயவின் தேர்தல் காரியாலயத் திறப்பு விழாவுக்காக தாங்கள் ஏமாற்றி அழைத்து வரப்பட்டதாக , நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

கிளிநொச்சி , கரடிப்போக்கு சந்தியில், கோத்தபாய ராஜபக்சவுக்கான தேர்தல் காரியாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது விதவைகள், உடல் ஊனமுற்றோர், முதியோர் என்போருக்கு உதவித்தொகை வழங்கவுள்ளதாக ஆசை காட்டி, ஏராளமான பொதுமக்களை ஏமாற்றி , நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைத்து வந்துள்ளனர்.

எனினும் அவர்களுக்கு எவ்வித உதவித்தொகையும் வழங்கப்படவில்லை.

" உதவித்தொகை மட்டுமில்லை, எங்களுக்கு சாப்பாடு கூட தராமல் , ஒரு கப் ஜூஸை மட்டும் தந்து ஏமாத்திட்டாங்கள்" என்று அதில் கலந்து கொண்ட பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.