மகிந்தவை தேடி வீடடிற்கு ஓடிய கருணா? இதுதான் காரணம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, September 29, 2019

மகிந்தவை தேடி வீடடிற்கு ஓடிய கருணா? இதுதான் காரணம்

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் கருணாவிற்கும் இடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பு மகிந்தவின் இல்லத்தில் நடைபெற்றது.

தேர்தல் அறிவிக்கப் பட்டதில் இருந்து ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி எல்லா கட்சிகளுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தது ஈ.பி.டி.பி செயலாளர் டக்ளஸ் உட்பட

ஆனால் கிழக்கில் உள்ள ஆயுதக் குழுக்களான கருணா மற்றும் பிள்ளையான் அணியை மகிந்த அணி கண்டு கொள்ளவில்லை இதற்கு காரணம் கோத்தாபாயவிற்கு இவர்களை இணைப்பதில் அடிப்படையில் விருப்பம் இல்லை என்பதுடன் இவர்களை வளர்த்து அல்லது ஆதரிப்பது சிங்கள கடும் போக்காளர்களிடத்தில் கடும் எதிர்ப்பிற்கு உள்ளாகலாம் என அஞ்சுவதன் காரணத்தால் இவர்களை ஒதுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கோத்தாபாயவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்து பல நாட்கள் கடந்து விட்டன தேர்தலும் அறிவிக்கப் பட்ட விட்டன தமக்கு அழைப்பு வர வில்லை என்பதை அவதானித்த கருணா மகிந்தவின் வீட்டிற்கே ஓடியதுடன் மட்டுமல்லாது தானது ஆதரவை நாம் கேட்காமலே எமக்கு வழங்கி விட்டார் கருணா.

இந்த தகவலை பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே உறுதிப்படத்தினார்.