வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் இன்று(வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிறிலங்கா இராணுவ தளபதி சவேந்திர சில்வாவின் வடக்கிற்கான வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்துடன்,” ஜ.நாவே போர்க் குற்றவாளி சவேந்திர சில்வாவை கைதுசெய், தமிழர்களின் பாதுகாப்பிற்கு ஜ.நா அமைதி காக்கும் படையினை உடனடியாக அனுப்பு” என்ற வாசகம் பொறிக்கபட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க கொடிகளையும் கையில் ஏந்தியிருந்தனர்.
இதேவேளை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் இன்றுடன் 944 நாட்களை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக சவேந்திர சில்வாவலேயே பெரும்பாலானவர்கள் காணமல்ஆக்கப்பட்டும் படுகொலை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.