துருக்கி தீவிரவாதிகள் ரிஷாட் பதியூதீனுக்கு பாதுகாப்பளித்து வருகிறார்கள்! - Kathiravan - கதிரவன்

Breaking

Friday, September 20, 2019

துருக்கி தீவிரவாதிகள் ரிஷாட் பதியூதீனுக்கு பாதுகாப்பளித்து வருகிறார்கள்!

வெளிநாட்டிலிருந்து பல்வேறு தீவிரவாதிகளை இலங்கைக்குள் அழைத்துவந்து அவர்களுக்கு அமைச்சர் ரிஷாட் பதியூதீன் பாதுகாப்பளித்து வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திஸாநாயக்க பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டை வெளியிட்டார்.

சஹ்ரான் போன்ற அடிப்படைவாத தீவிரவாதிகளை துருக்கியிலிருந்து அழைத்துவந்து அவர்களுக்கு அமைச்சர் பதியூதின் பாதுகாப்பு அளித்து வருவதாகவும், தீவிரவாதிகளிடம் இருந்து பணம், வரப்பிரசாதங்கள் என்பவற்றை அவர் அனுபவித்து வருவதாகவும் எஸ்.பி.திஸாநாயக்க கூறினார்.

இவற்றுக்கு போதியளவு ஆதாரங்கள் தன்னிடமே இருப்பதாகவும் தெரிவித்தார்