விடுதலைப்புலிகள் ஆவணங்களை தேடி வெறுங்கையுடன் திரும்பிய ஶ்ரீலங்கா கடற்படையினர்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, September 20, 2019

விடுதலைப்புலிகள் ஆவணங்களை தேடி வெறுங்கையுடன் திரும்பிய ஶ்ரீலங்கா கடற்படையினர்!

வடதமிழீழம்: கிளிநொச்சி சிவபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் எவையும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் முக்கிய ஆவணங்கள், பெறுமதியான பொருட்கள் காணப்படலாம் என கடற்படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் நீதவான், கண்டாவளை பிரதேச செயலகம் மற்றும் கிராம சேவையாளர் ஆகியோர் முன்னிலையில் கடற்படையினரால் குறித்த அகழ்வுப் பணிகள் முன்னடுக்கப்பட்டன.

எனினும் குறித்த தேடுதலில் எவையும் கிடைக்காத அகழ்வுப் பணிகள் கைவிடப்பட்டன