சிறிலங்காவில் நீதித்துறை நீதியாகவும் இல்லை, அதனை மதிப்பதற்கு பௌத்த பேரினவாதம் தயாராகவும் இல்லை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, September 23, 2019

சிறிலங்காவில் நீதித்துறை நீதியாகவும் இல்லை, அதனை மதிப்பதற்கு பௌத்த பேரினவாதம் தயாராகவும் இல்லை!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஏற்கனவே சிறையில் இருந்த ஞானசாரதேரர் ஜனாதிபதி மைத்திரிபாலசிறினவின் தலையீட்டுடன் விடுவிக்கப்பட்டார்.

இப்போது அவர் மீளவும் நீதிமன்ற தீர்ப்பை புறந்தள்ளி பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்த கரைக்கு அருகாமையில் பிக்குவின் உடலை தகனம் செய்வதற்கு முன்னின்றுள்ளார்.

சட்டத்தை மீறிய அவரையும் அவரது சகாக்களையும் கைது செய்யாமல் பொலிசார் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளனர். இதே பொலிசார் தான் வவுனியா வெடுக்குநாரி மலையில், ஆலயத்திற்கு செல்ல ஒரு ஏணியை பொருத்தியதற்கு பல மாதங்களாக ஆலய நிர்வாக சபையை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து அலைக்கழிப்பு செய்கிறார்கள்

தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் போது அல்லது சட்டத்தை மீறும் வகையில் நடந்து கொள்ளும் போதோ தமது தொலைபேசிகளில் படமெடுத்து அச்சுறுத்தும் புலனாய்வு துறையும், பொலிசாரும் செம்மலையில் தங்கள் தொலைபேசிகளை வெளியில் எடுக்கவேயில்லை.

சட்டத்தை மீறிய பிக்குகள் மீது முல்லைத்தீவு நீதிமன்றம் கடுமையான நடவடிக்கை எடுக்க போகின்றதா? என்றால் அதுவும் இல்லை. இதே தமிழ்மக்கள் என்றால் சிறிலங்காவின் நீதித்துறை உடனடியாகவே நீதியை நிலை நாட்டியிருக்கும். வீடு வீடாக சென்று கைதுகள் நடந்திருக்கும்.