அம்பாறை – ஒலுவில், பாலமுனை பகுதியில் இருந்து பெருமளவு வெடிப்பொருள்கள் இன்று (18) சற்றுமுன்னர் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது ரி-56 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்கான மெகசின் ஒன்றும் வெடிப்பொருள் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் இராசாய பொருள்கள், வெடி மருந்துகள், ஜெலிக்கன் குச்சிகள் என பல்வேறு வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த வெடிப்பொருள்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றக்கட்டுள்ளன.
இதேவேளை, பெக்கோ இயந்திரத்தைப் பயன்படுத்தி குறித்த பகுதியில் தொடர்ந்து அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பயங்கரவாதி ஷஹ்ரான் குழுவினரது வெடி பொருட்களே இவையெனச் சந்தேகம்.