யாழ்.தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் நோயாளா்களுக்கு வழங்கப்படும் பாலில் கால் பங்கு பாலும் முக்கால் பங்கு தண்ணீருமே இருப்பதாக நோயாளா்கள் கூறுகின்றனா்.
வைத்தியசாலையில் நோயாளா்களுக்கு வழங்கப்படும் பால் நோயாளா்களின் ஆரோக்கியத்திற்காக வழங்கப்படுகின்றது.
இந்நிலையில் பால் வழங்கும் ஒப்பந்தம் எடுத்தவா்களே இவ்வாறான வேலை செய்வதாக சுட்டி க்காட்டும் நோயாளா்கள் மரணத்துடன் போராடிக் கொண்டிருப்பவா்களிடம் பிடுங்கி தின்னும் இந்த நிலைக்கு உாியவா்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.என கேட்டுள்ளனா்.