மாணவர் அனுமதிக்கு இரஞ்சம் வாங்கிய யாழ். இந்துக் கல்லூரி அதிபர் கைது! - Kathiravan - கதிரவன்

Breaking

Wednesday, September 18, 2019

மாணவர் அனுமதிக்கு இரஞ்சம் வாங்கிய யாழ். இந்துக் கல்லூரி அதிபர் கைது!

வடதமிழீழம்: யாழ்.இந்து கல்லுாாி அதிபா் மாணவா் அனுமதிக்கு லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் லஞ்ச ஒழிப் பு ஆணைக்குழுவினால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது,

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழவின் விசேட அதிகாாிகள் குழு அதிபரை கைது செய்து கொண்டு சென்றுள்ளதாகவும், பாடசாலை மாணவர் அனுமதிக்கு கையூட்டுப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் புலன் விசாரணைகளை முன்னெடுத்த இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாட்டுதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, அந்தப் பாடசாலையின் அதிபரை இன்று கைது செய்தது.

அத்துடன், மேலும் சில பாடசாலை அதிபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்