தண்டவாளத்தில் உறங்கிய நபர் ரயிலில் சிக்குண்டு உயிரிழப்பு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, September 19, 2019

தண்டவாளத்தில் உறங்கிய நபர் ரயிலில் சிக்குண்டு உயிரிழப்பு

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் சிக்குண்டு ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (வியாழக்கிழமை) குறித்த நபர் தண்டவாளத்தில் உறங்கிக்கொண்டிருந்த கொண்டு இருந்த வேளை பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த உடரட்ட மெனிக்க என்ற ரயிலில் சிக்குண்டு குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் 50 வயதுடையவர் எனவும் இவர் எந்த பிரதேசத்தை சேர்ந்தவர் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பத்தில் உயிர்ழந்தவரின் சடலத்தை ரயில் தண்டவாளத்தை சீர்செய்பவர்களின் ஊடாக சடலம் வட்டவளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.