கிழக்கில் இனியும் இவர்கள் வேண்டாமே! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, September 20, 2019

கிழக்கில் இனியும் இவர்கள் வேண்டாமே!

கிழக்கு மாகாணத்தில் இனியும் அராஜகத்தினை அரங்கேற்றிய குறுநில மன்னர் ஆட்சி வேண்டாமென கிழக்கின் மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்தகால மகிந்தவின் ஆட்சியில் பிள்ளையான் , பிரதீப் மாஸ்டர்(எட்வின் கிருஸ்ணராஜா), சித்தாண்டி அருண் திருநாவுக்கரசு, மட்டக்களப்பு டவுன் சிவ கீர்த்திக்கா, ஆரையம்பதி பிரசாந்தன், களுவாஞ்சிக்குடி வீரா, அம்பாரை இனியபாரதி ஆகியோர் கிழக்கை அடக்கி ஆண்டமை அனைவரும் அறிந்த விடயம்.

மகிந்தவின் ஆட்சியின்போது கிழக்கில் கடத்தல், கொலை, மாவீரர் குடும்பம், தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளரை கடத்தி பணம் பெறுதல் இப்படியான சம்பவங்களே அரங்கேற்றப்பட்டிருந்தன.

இந்த பொறுப்புக்களையே மகிந்தவும் , பசிலும் , கோட்டாவும் கிழக்கின் ஒட்டுண்ணி ஆட்சியாளர்களிற்கு வழங்கியிருந்தனர்.

இந்நிலையில் ஒரு கட்டத்தில் பின்னர் தனது எல்லையை தாண்டி கப்பம் வசூலிக்க கொள்ளையடிக்க அந்த ஏரியா தாதாமாருக்குள் பிரச்சினை உருவாக உடனே பெரிய தாதாவான மகிந்த யூனியன் மீட்டிங் போட அதில் வாய்த்தர்க்கமாம் ஏற்பட்டதனால தான், சிவகீர்த்திக்கா பிரிந்து ஹிஸ்புல்லா அப்புறம் சரத்பொன்சேகா அணியோடு சேர்ந்தமை அனைவருக்கும் தெரிந்த கதை.

இவர்கள் அனைவரும் யுத்தம் நிறைவடைந்தும் தமிழர்களுக்கு எந்த தீர்வையும் பெறுக்கொடுக்கவில்லை. ஆனால் தமிழர் தாயகத்தை பிரித்து பிரதேசவாதம் பேசி இஸ்லாமியர்களிடம் கிழக்கை ஒப்படைத்தார்கள்.

அப்பொழுது கிழக்கில் அரச துறைகளில் வடக்கு தமிழர்கள் முக்கிய பதவிகளில் இருப்பதற்கு தடையாக இருந்தனர்இஸ்லாமியர். இந்நிலையில் கிழக்கு அவர்களிடம் தாரைவார்க்கப்பட்டதும் அதனை தமக்கு சாதகமாக பயன் படுத்தி அரச துறைகளை தமது அதிகாரத்தின் கீழ் இஸ்லாமியர் கொண்டு வந்தனர். அந்த அவலம் கிழக்கில் இன்றுவரை தொடர்கிறது.


அத்துடன் கிழக்கு தமிழர்களை தமது அடிமைகளாகவும் , இஸ்லாமிய மற்றும் இனப்படு கொலையாளர்களான மகிந்தவின் வளர்பு புறோயிலர் கோழிகளாகவும் நினைத்து தமிழின துரோகிகள் இன்றுவரை அரசியலில் கிழக்கு மக்களை மூளை சலவை செய்துவருகின்றமை வேதனைக்குரிய விடயம் என சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளதோடு இந்த ஒட்டுண்ணிகளின் ஆட்சி கிழக்கில் இனியும் தொடரவேண்ண்டாமென தெரிவித்துள்ளனர்.