சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்தார் முன்னாள் இராணுவ தளபதி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, September 20, 2019

சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்தார் முன்னாள் இராணுவ தளபதி!

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தான்போட்டியிடவுள்ளதாகவும், அதற்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் குறிப்பிடப்படும் செய்தி முற்றிலும் பெய்யானது என முன்னாள் இராணுவ தளபதி லெப்டினல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இராணுவ தளபதி பதவியில் இருந்து தான்ஓய்வு பெற்றதை தொடர்ந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் ஊடாக குறிப்பிடப்பட்டன.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக எவ்வித தீர்மானங்களையும் தான் இதுவரையில் மேற்கொள்ளவில்லை. ஆகவே சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகள் நிராகரிக்கத்தக்கன என்றார்