நீராவியடி பிள்ளையார் ஆலயம் என்ன சுடுகாடா? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, September 22, 2019

நீராவியடி பிள்ளையார் ஆலயம் என்ன சுடுகாடா?

முல்லைத்தீவு, பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் மறைந்த பௌத்த பிக்குவின் உடலத்துக்கான இறுதிக் கிரியைகளை செய்வதற்கு திட்டமிட்டு ஏற்பாடுகள் நடக்கின்றன தகவல்கள் வெளியாகியுள்ளது.'

முன்னதாக இன்றைய தினம் அதற்கு நீதிமன்றம் தடைவிதித்திருப்பினும், நாளைய தினம் மீண்டும் வழக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இதில் வாதாடவென தெற்கிலிருந்து சட்டத்தரணிகள் வருகைதரவுள்ளதாகவும் அறியமுடிகிறது.

சைவ ஆலய மரபுகளை, பண்பாடுகளை மீறி இடம்பெறப்போகும் இந்த விடயத்தைக் கண்டு அப்பகுதி மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.நாளைய தினம் ஆலயப் பகுதியில் மக்கள் திரளவுள்ளனர். எனவே பொங்கலுக்கு திரண்டதைப்போன்று இதற்கும் திரளவேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.

ஆலய நிர்வாகத்தினரும் - மரபுரிமை பேரவையினரும், நாளைய தினம் செம்மலைக்கு மக்களை வரச்சொல்லி அழைப்புவிடுத்துள்ளனர்.