மீண்டும் வெள்ளை வேன் வருமா? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, September 22, 2019

மீண்டும் வெள்ளை வேன் வருமா?

மீண்டும் வெள்ளை வேன் வருமா என்ற அச்சம் பல பேர் மத்தியில் இருக்கின்றது என முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டில் உள்ள இரண்டு பிரதான கட்சிகளில் ஏதோவொரு கட்சி தான் ஜனாதிபதி ஆட்சியை கைப்பற்றும். ஒரு தேசியக் கட்சி தங்களுடைய வேட்பாளரை அறிவிக்காது தங்களுக்குள் திண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு தேசியக் கட்சி வேட்பாளரை அறிவித்து விட்டது.

அவருடைய பெயரைக் கேட்டாலே எங்களுக்கு எல்லாம் பயமாய் இருந்தது. சிலவேளை அவர் வந்து விட்டால் என்ன நடக்கும் என்ற பயம் பல பேர் மத்தியில் இருக்கிறது. மீண்டும் வெள்ளை வேன் வருமா அல்லது கிறீஸ் மனிதன் வருவானா என்ற பயமெல்லாம் இருக்கிறது. ஆனபடியால் நவம்பர் 16 ஆம் திகதிக்கு பின் ஒரு நல்ல நிலை ஏற்படுமாக இருந்தால் வெளிநாடுகளில் இருப்பவர்கள் இங்கு முதலீடுகளை செய்ய முடியும் எனத் தெரிவித்தார்.