அமைச்சர் சஜித் வடக்கிற்கு விஜயம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, September 8, 2019

அமைச்சர் சஜித் வடக்கிற்கு விஜயம்!

ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிரதித் தலை­வரும் அமைச்­ச­ரு­மான சஜித் பிரே­ம­தாச வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார்.


அதற்கமைய அவர் நாளை (திங்கட்கிழமை) இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

வடக்­கிற்கு விஜயம் செய்யும் அவர், நாளை  காலை யாழ். முற்­ற­வெ­ளியில் அமைக்கப்பட்டுள்ள என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் கண்காட்சியில் பங்கேற்கவுள்ளார்.

அத­னை­ய­டுத்து பிற்­பகல் ஒரு­ம­ணி­ய­ளவில் கிளி­நொச்­சிக்­கு­ செல்லும் அமைச்சர், கண்டாவளை மற்றும் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தலா இரண்டு வீடமைப்புத் திட்டங்களை மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார்.

என்­டர்­பி­ரைசஸ் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்­டத்தின் கண்­காட்­சி­ நேற்று யாழில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வினை ஆரம்பித்து வைப்பதற்கு நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் பிரதமர் ரணில் மாத்திரமே இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.