யாழில் தொடரும் வாள்வெட்டுக் குழுக்களின் வன்முறைகள் – நவாலியிலும் சம்பவம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, September 8, 2019

யாழில் தொடரும் வாள்வெட்டுக் குழுக்களின் வன்முறைகள் – நவாலியிலும் சம்பவம்

நவாலி அட்டகிரி பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல், வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் அங்கிருந்த பொருள்களை அடித்து சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
இந்த சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றது.
இரு மோட்டார் சைக்கிள்களில் சென்ற 4 பேர் கொண்ட கும்பலே வீட்டில் இருந்தவர்களை வாள்களைக் காண்பித்து மிரட்டிவிட்டு வீட்டிலிருந்த பொருள்கள், தளபாடங்களை அடித்துச் சேதப்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து அவர்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, அண்மைய நாட்களாக யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில் பொலிஸார் அசமந்தமாகச் செயற்படுவதாக பொது மக்கள் தரப்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.