ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் தனக்கு ஆதரவு வழங்காதவர்களுக்கு ரணில் முக்கிய அறிவிப்பு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, September 8, 2019

ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் தனக்கு ஆதரவு வழங்காதவர்களுக்கு ரணில் முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடுவதில் விருப்பமில்லாதவர்கள், விரும்பியவாறு அரசியல் தீர்மானங்களை எடுத்துக் கொள்ளுமாறு பிரதமர் ரணில்  கூறியதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடப்போவதாக ரணில் அறிவித்துள்ளதாக வெளியாகிய செய்தி குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் கூறியுள்ளதாவது, “சிரேஸ்ட அமைச்சர்களுடன் 6 ஆம் திகதி அலரி மாளிகையில்  நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் ரணில் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் குறித்த பேச்சுவார்த்தையின் ஆரம்பத்திலேயே பிரதமர், தனக்கு சகல தரப்பினரதும் ஆதரவு இருப்பதாகவும்  கீழ் மட்டம் முதல் சகல தரப்பினரும் தான் ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.

அந்தவகையில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்படுகின்ற சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளின் ஆதரவும் தனக்கு இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்

ஆகையால்  ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடுவதில் விருப்பமில்லாதவர்கள், விரும்பியவாறு அரசியல் தீர்மானங்களை எடுத்துக்கொள்ளலாம் எனவும் பிரதமர் ரணில் கூறினார்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு சிரேஸ்ட அமைச்சர்களுடன் பிரதமர் ரணில் நடத்திய விசேட கலந்துரையாடல் குறித்து ஒவ்வொரு அமைச்சரும் வெவ்வேறுபட்ட கருத்துக்களை தற்போது வெளியிட்டு வருவதனை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.