நானே ஜனாதிபதி வேட்பாளர் ரணில் அறிவிப்பு: கபீர் ஹாசிம் வெளிநடப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, September 6, 2019

நானே ஜனாதிபதி வேட்பாளர் ரணில் அறிவிப்பு: கபீர் ஹாசிம் வெளிநடப்பு!

ஜனாதிபதி தேர்தலில் தானே போட்டியிடுவேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று அலரி மாளிகையில் நடந்த கூட்டத்தில் அறிவித்தார். ஐதேகவின் பிரமுகர்கள் கலந்து கொண்ட கூட்டத்திலேயே ரணில் இந்த அறிவிப்பை விடுத்தார்.

நாளை மறுநாள் (8) அலரி மாளிகையில் சஜித் பிரேமதாசவை சந்தித்து பேசவுள்ளதாகவும் தெரிவித்தள்ளார்.


கூட்டத்தின் ஆரம்பத்திலேயே, தான் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடப் போவதாக ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார். இந்த கூட்டத்தில் சஜித் பிரேமதாச, மங்கள சமரவீர ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.

கூட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே, ஹபீர் காசிம் கூட்டத்தை விட்டு வெளியேறினார். அவருடன், அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கடுமையாக தர்க்கப்பட்டார். கட்சி ஒரு முடிவை எடுத்தால், அதற்கு கட்டுப்பட வேண்டும், பகிரங்கமாக எப்படி வெளியில் விமர்சிப்பீர்கள் என கிரியெல்ல கூற, இருவருக்குமிடையிலான தர்க்கம் உச்சமடைந்து, ஹபீர் காசிம் வெளியேறினார்.

கட்சி தலைமை எடுக்கும் முடிவுகளின் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் செயற்பட தவறினால், சபை முதல்வர் பதவியை துறக்கப் போவதாக கிரியெல்லா தெரிவித்தார். அவரை சமாதானப்படுத்திய ரணில், கட்சியின் கட்டுப்பாட்டிற்கு கீழ்ப்படிவது அனைவரதும் முதன்மையான கடமையென்றார்.

மு.காவின் தலைவர் ஹக்கீம், கோட்டாபயவை சந்திக்க சென்றதையும் சுட்டிக்காட்டி கிரியெல்ல கண்டித்தார்.

அமைச்சர்கள் காமினி ஜெயவிக்ரமா பெரேரா, ஜோன் அமரதுங்கா, ரவி கருணநாயக்க, அகிலா விராஜ் கரியவாசம், சரத் பொன்சேகா, மலிக் சமரவிக்ரம, ரஞ்சித் மத்தும பண்டார, மற்றும் தயா கமகே ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.