யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சிறுப்பிட்டியில் நேற்று இரவு 10-00 மணியளவில் பாரிய விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
கயஸ் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்ன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெறுள்ளது.
இந்த வாகன விபத்தில் வடமராட்சி தொண்டைமானாறு 3ம் சந்தியைச் சேர்ந்த அருந்தவராசா அரவிந்தன் எனும் 22 வயது இளைஞர் உயிரிழந்தள்ளார்.
திருமண நிகழ்வு ஒன்றுக்கு சென்று விட்டு நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சிறுப்பிட்டி நேக்கி சென்ற சமயம் பின்னால் வேகமாக வந்த கயஸ் வாகனம் மோடார் சைக்கிளில் சென்றவர்களை மோதித்தள்ளியுள்ளது.
இந்த நிலையில் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற இளைஞர் படுகாயம் அடைந்து யாழ் போதான வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.