இன அழிப்பு சூத்திரதாரி மகிந்த, கோட்டாவுடன் கூட்டமைப்பு இரகசிய பேச்சு! - Kathiravan - கதிரவன்

Breaking

Sunday, September 22, 2019

இன அழிப்பு சூத்திரதாரி மகிந்த, கோட்டாவுடன் கூட்டமைப்பு இரகசிய பேச்சு!

தமிழ்தேசிய கூட்டமைப்பினருக்கும் மஹிந்த, கோட்டாவுக்கும் இடையில் மிக இரகசியமாக சந்தி ப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் அதில் இரா.சம்மந்தன், சுமந்திரன் ஆகியோா் பங்கேற்றதாக வும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ராஜபக்சவினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த சந்திப்பு நடந்துள்ளதுடன் இது தொடர்பான செய்திகள் எதுவும் வெளியாகவில்லை. கடந்த 19 ஆம் திகதி நடைபெற்ற அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்காக கொண்டு வந்த யோசனையை ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் அணியினர் எதிர்த்தன் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ராஜபக்சவினருக்கும் இடையிலான இந்த சந்திப்பு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தச் செய்தி செய்தி ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளதுடன் இவ் விடயம் பெரும் பேசு பொருளாகவும் மாறியுள்ளது