தன்னை துஸ்பிரயோகம் செய்தவர்களிடம் இருந்து தப்பிய சிறுமி நிர்வாணமாக நடுரோட்டில் உதவி கேட்டு ஓடியுள்ள சம்பவம் பலத்த அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த ஒரு சிறுமி தன்னுடைய உறவினர் மற்றும் நண்பருடன் கண்காட்சிக்கு சென்றுவிட்டு, அங்கிருந்து கோவிலுக்கு புறப்பட்டுள்ளார்.
சாலையில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்த மூன்று பேர், இவர்களை பார்த்ததும் பின் தொடர் ஆரம்பித்தனர். இதனால் பயந்து போன அந்த சிறுவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். உடனே அந்த மூன்று மர்ம நபர்கள் அந்த சிறுமியை அங்கிருந்து கடத்தி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்க்கு தூக்கி சென்றுள்ளனர்.
சிறுமியை அடித்து துன்புறுத்தி, பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளனர். இதற்கிடையில் தப்பி ஓடிய உறவினர் அருகாமையில் உள்ள சந்தைக்கு சென்று, அங்கிருந்தவர்களிடம் உதவி கேட்டு கெஞ்சி கதறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த கடைக்காரர், சிறுமியின் உறவினருடன் கடத்தி சென்ற இடத்திற்கு விரைந்துள்ளார்.
இவர்களை பார்த்ததும் சிறுமியை அப்படியே விட்டு அந்த மூன்று பேரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். உறவினரும், அந்த கடைக்காரரும் உதவ வருவதை கூட புரிந்து கொள்ள முடியாமல் அதிர்ச்சியில் உறைந்திருந்த அந்த சிறுமி, உடலில் ஆடை இல்லாமால் நிர்வாணமாக அரை கிமீ தூரத்திற்கு பயந்து அலறியபடியே ஓடியுள்ளார்.
பின்னர் பத்திரமாக சிறுமியை மீட்டு அவருக்கு ஆடைகளை உடுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிஸார், தீவிர விசாரணைக்கு பின்னர் அந்த மூன்று மர்ம நபர்களையும் இன்று கைது செய்துள்ளனர்.