டெல்லியில் உள்ள பூங்கா ஒன்றில் இளம்காதல் ஜோடி சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் பஹர்கஞ்ச் பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் நேற்று மாலை 5.30 மணியளவில், இளம்காதல் ஜோடி எந்த அசைவும் இல்லாமல் நீண்ட நேரம் தரையில் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தபோது அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நேரில் பார்த்த ஒருவரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது, நீண்ட நேரமாக அந்த காதல் ஜோடி, பூங்காவில் வலம்வந்துள்ளனர். அதன்பிறகு தரையில் படுத்து கிடந்ததால் உறங்குவதாகவே நினைத்து கண்டுகொள்ளாமல் இருந்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் கூறுகையில், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளோம். இருவரும் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள். இளைஞனின் பெயர் விபின், பெண்ணின் பெயர் சரோஜ்.
வியாழக்கிழமையன்று இருவரும் வீட்டை விட்டு வெளியேறியிருக்கின்றனர். விபின் தன்னுடைய மகளை கடத்திவிட்டதாக சரோஜின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதேபோல மகனை காணவில்லை என விபின் பெற்றோரும் புகார் கொடுத்துள்ளனர்.
இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என நாங்கள் சந்தேகித்துள்ளோம். விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளனர்.