மனித படுகொலை தொடர்பில் சந்தேக நபர்களிற்கு பொலிஸார் வலைவீச்சு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, September 23, 2019

மனித படுகொலை தொடர்பில் சந்தேக நபர்களிற்கு பொலிஸார் வலைவீச்சு!

கடந்த 19 ஆம் திகதி எஹலியகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலாபிட்டிய வீதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளனர்.

இந்த நிலையில் அவர்களின் புகைப்படங்களை பொலிஸ் தலைமையகம் நேற்றையதினம் வெளியிட்டுள்ளதோடு சந்தேக நபர்களை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் கோரிக்கையும் விடுத்துள்ளது.

மேலும் புகைப்படங்கள் உள்ள சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அலைபேசி மற்றும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறும் பொலிஸார் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எஹலியகொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி - 071-8591402

எஹலிய கொடை பொலிஸ் நிலையம் - 036-2258222