நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட குருகந்த ரஜ மகாவிகாரையின் விகாரபதி கொலம்பே மேதாலங்காதரதேரர் என்னும் புத்த பிக்குவின் பூதவுடல் தற்போது நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திலுள்ள புத்த பிக்குவின் தங்குமிடத்தில் வைக்கப்பட்டு சிங்கள மக்கள் அஞ்சலி செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
உயிரிழந்த புத்தபிக்குவின் உடலை நீராவிப்பிள்ளையார் வளாகத்தில் அடக்கம் செய்ய நினைப்பது தமிழ்மக்களை காயப்படுத்தும் செயல் வேண்டுமேன்றே இந்த அரசு தமிழர்வளங்களையும் புத்தவிகாரைகளையும் சிங்கள குடியேற்றங்களையும் அமைத்து சூறையாடுகிறது.
நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் நிர்வாகத்தினர் மற்றும் மக்களின் கடும் முயற்சியினால் புத்த பிக்குவின் பூதவுடலை ஆலய வளாகத்தில் புதைப்பதற்கோ அல்லது தகனம் செய்வதற்கோ எதிராக நீதிமன்றக் கட்டளை பெறப்பட்டுள்ளது.
தற்போது எமது மக்கள் நீராவியடிப் பிள்ளையார் கோயில் வளாகத்தில் கூடிய வண்ணமுள்ளனர்..