ஆடு மேய்த்த முதியவரை கொன்று தலையை வெட்டிய திருடன்: கைது செய்தபோது புத்தி சுவாதீனமற்றவராக நடிப்பு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, September 27, 2019

ஆடு மேய்த்த முதியவரை கொன்று தலையை வெட்டிய திருடன்: கைது செய்தபோது புத்தி சுவாதீனமற்றவராக நடிப்பு


முதியவர் ஒருவரைக் கொலைசெய்த முஸ்லிம் இளைஞன் அவருடைய தலையை துண்டித்துச் சென்ற செயல் திருக்கோவில் பிரதேசத்தில் மிகுந்த பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில் நேருபுரம் தாண்டியடிப் பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான மாரிமுத்து முனிசாமி என்ற 65 வயது முதியவர் நேற்றுமுன்தினம் ஆடுமேய்க்கச் சென்றிருக்கின்றார்.

அன்று மாலை அவர் கொல்லப்பட்ட நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது.

சடலத்தில் கழுத்து வெட்டப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் ஒரு பிளாஸ்டிக் போத்தலில் அவரது இரத்தம் சேரிக்கப்பட்ட நிலையிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த கொலையைச் செய்ததாகக் குற்றம் சுமத்தபட்டு ஒரு முஸ்லிம் இளைஞன் காவல்துறையினால் கைதுசெய்யப்பட்டுள்ளான்.

அவன் கைதுசெய்யப்பட்டபோது சித்தசுவாதீனம் இல்லாதவன்; போன்று அவன் நடித்ததாக அங்கிருந்தவர்கள் கூறுகின்றார்கள்.

ஆடு திருடமுற்பட்டதை அந்த முதியவர் பார்த்துவிட்டதாலேயே அவன் அந்த முதியவரை கொலைசெய்ததாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்துகின்றார்கள்.

இந்தச் சம்பவம் அப்பிரதேசத்தில் மிகுந்த பதட்டத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது