நீதிமன்றத்தின் தீா்ப்பை மீறியும் , பொதுமக்கள், சட்டத்தரணிகளின் எதிா்ப்பை மீறியும் உயிரிழந்த பிக்குவின் உடல் முல்லையில் தனம் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தால் குறிக்கப்பட்ட இடத்தில் அல்லாமல் வேறு இடத்தில் பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட குருகந்த ரஜ மகாவிகாரையின் விகாரபதி கொலம்பே மேதாலங்காதரதேரர் உடல் நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திலுள்ள புத்த பிக்குவின் தங்குமிடத்தில் வைக்கப்பட்டு சிங்கள மக்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
இந்நிலையில் கலகம் தடுக்கும் பொலிஸாா் சுமாா் நுாற்றுக்கணக்கானவா்கள் பாா்த்துக் கொண்டிருக்க இந்த தகனம் இடம்பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.