யாழ் நீதிவான் நீதிமன்ற மறியல் அறைக்குள் சந்தேகநபர் ஒருவர் கழுத்தை பிளேட்டால் கீறி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இன்று காலை இந்த பரபரப்பு சம்பவம் நடந்தது.
2 கிராம் 400 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர், கடந்த யூலை மாதத்தில் இருந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று திடீர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடனடியாக மீட்கப்பட்ட அவர், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்