ஜனாதிபதித் தேர்தலில் 18 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, September 10, 2019

ஜனாதிபதித் தேர்தலில் 18 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்!

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்படவுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி தேர்தலை எதிர்வரும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி முதல் டிசம்பர் 9 ஆம் திகதிக்குள் நடத்த முடியும் என கூறினார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஊடக பிரதானிகளை தெளிவூட்டும் செயற்பாடு இன்று காலை தேர்தல்கள் ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது.


அங்கு கருத்து தெரிவித்துள்ள அவர், பிரதான அரசியல் கட்சிகளை சேர்ந்த 17 பேர் தேர்தலில் போட்டியிடவுள்ளமை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தடவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சுயாதீனமாக போட்டியிடவுள்ளமை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில்  முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவும் தேர்தலில் சுயாதீனமாக போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்தத் தடவை ஜனாதிபதித் தேர்தலில் 18 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்தத் தடவை ஜனாதிபதித் தேர்தலின்போது 2018 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் கருத்திற்கொள்ளப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, 159,92,096 (ஒரு கோடியே ஐம்பதொன்பதாயிரத்து தொன்னூற்றி இரண்டாயிரத்து தொன்னுற்றியாறு) வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது