அரசியல் நியமனத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவளித்த விக்னேஸ்வரன்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, September 12, 2019

அரசியல் நியமனத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவளித்த விக்னேஸ்வரன்!

யாழ் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் ஆட்சேர்ப்பில் அரசியல்ரீதியான நியமனம் வழங்கப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் மேற்கொள்ளும் சுழற்சிமுறையிலான உணவுதவிர்ப்பு போராட்ட இடத்திற்கு, வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் கலந்துரையாடினார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்விசாரா ஊழியர்களின் வெவ்வேறு பதவிநிலை வெற்றிடங்களை அரசியல்ரீதியான நியமனத்தின் மூலம் நிரப்பும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சில அரசியல்வாதிகளின் சிபாரிசுடன் பெயர் விபரங்களை அனுப்பியவர்களிற்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதேவேளை, நியாயமாக விண்ணப்பித்த குடாநாட்டை சேர்ந்த பலர் கணக்கெடுக்கப்படவில்லையென குறிப்பிட்டு, இன்று இரண்டாவது நாளாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் பாதிக்ப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது