வாள்களுடன் சென்றதாக தெரிவித்து உள்ளுர் இளைஞர்கள் சிலர் படையினரால் கைதாகியுள்ளனர்.கைதான இளைஞர்கள் இலங்கை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.எனினும் தமது படைமுகாமிலிருந்த வாள்களையே படையினர் சான்றுப்பொருளாக கையளித்ததாகவும் தம்மிடம் இவ்வாறு வாள்கள் இருந்திருக்கவில்லையெனவும் கைதாகியுள்ள இளைஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் வளலாய் அன்ரனிபுரம் மற்றும் பொலிகண்டி பகுதிகளை சேர்ந்த இளைஞர் குழுக்களிடையே மூண்ட மோதலையடுத்து நடமாடிக்கொண்டிருந்தவர்களே கைதாகியுள்ளதாக தெரியவருகின்றது.
இதனிடையே வல்வெட்டித்துறை கரையோர படைமுகாமை சேர்ந்த படையினர் மீது இளைஞர்கள் குழுவொன்று நடத்திய வாள் வெட்டு சம்பவத்தில் படைச்சிப்பாய் ஒருவர் படுகாயமடைந்ததாகவும் பருத்தித்துறை பகுதியிலிருந்து வருகை தந்திருந்த உள்ளுர் இளைஞர் கும்பலே தாக்குதலை நடத்தியதாகவும் இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் இளைஞர்கள் சிலர் கைதாகியுள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகளை வல்வெட்டித்துறை பொலிஸ் தரப்பு மறுதலித்துள்ளது.