பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஸவிற்கு சுயமாக சிந்திக்கும் எவருமே வாக்களிக்கமாட்டார்களென முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
எனக்கு தெரிந்த வரையில், சுயமாக சிந்திக்கும் எந்த ஒரு தமிழனும் அவருக்கு வாக்களிக்க மாட்டான். வாக்களிக்கக்கூடாது. தமிழ் மக்களை கொன்று குவித்தவர்களில் அவரும் ஒருவர். இறுதி நேரத்தில் ஆயுதங்கள் எல்லாவற்றையும் விட்டு வெள்ளைக்கொடியுடன் போகும்போது அவர்கள் எல்லோரையும் கொன்று குவிக்குமாறு ஆணை வழங்கப்பட்டது. இந்த ஆணை வேறு எவராலும் வழங்கப்பட்டிருக்க முடியாது. அதற்கு பொறுப்பாக இருந்தவர்தான் செய்திருக்க வேண்டும். இவ்வாறு மக்களை ஜீவகாருண்யமற்ற வகையில் கொன்று குவித்தவருக்கு வாக்களிக்க முடியாது. அதைவிட வெள்ளை வேன். மஹிந்த ராஜபக்ஸ பிழை என்றுதான் நான் கருதுகின்றேன். தமிழ் மக்கள் எந்தக் காலத்திலும் அவருக்கு வாக்களிக்கக்கூடாதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை வாக்குகளை சிதறடிப்பதற்கு ஒவ்வொரு கட்சியும் வௌ;வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது உண்மை. தமிழர்களை பொறுத்தவரை பல கோரிக்கைகளை முன்வைக்க இருக்கிறோம். எவர் ஒருவர் அந்த கோரிக்கைகள் சரி என்று கூறுகின்றாரோ அவருக்கு ஆதரவைத் தெரிவிக்க முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.