கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையில் தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடை குறித்த தீர்ப்பாயம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது.
அதன் அடிப்படையில் தமிழ்நாடு மக்கள் கட்சி சார்பில் இன்று 17.08.2019 காலை 11.45 மணி அளவில் சென்னை அரசு விருந்தினர் மாளிகையில் தீர்ப்பாயம் நடைபெறும் இடத்திற்கு பொதுமக்கள் கையப்பமிட்டு அளித்த புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்ற கடிதத்தை அளிக்க சென்றார்கள்
ஆனால் நேரம் முடிந்துவிட்டது என்று கூறி காவல்துறை உள்ளே செல்ல அனுமதி மறுத்தது. மக்கள் கருத்து கேட்பு என்று அறிவித்து விட்டு மக்கள் கருத்து தெரிவிக்க முயன்ற பொழுது அதை தடுப்பது சனநாயக மறுப்பாகும் என ஒருங்கிணைப்பாளர் சே இளையராசா தெரிவித்துள்ளார்.