ஜே.வி.பி.யின் ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார திசாநாயக்க அறிவிப்பு - Kathiravan - கதிரவன்

Breaking

Sunday, August 18, 2019

ஜே.வி.பி.யின் ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார திசாநாயக்க அறிவிப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அதன் தலைவர் அநுரகுமார திசாநாயக்க அறிவிக்கப்பட்டுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் தேசிய மக்கள் சக்தி கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஆரம்பமாகியது.

காலி முகத்திடலில் இடம்பெற்றுவரும் இந்தக் கூட்டத்தில் 20 வருடங்களின் பின்னர் மக்கள் விடுதலை முன்னணியால் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

1999ஆம் ஆண்டு நந்தன குணதிலக மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கி மூன்றாவது இடத்தை பெற்றுக் கொண்டிருந்தார்.

அதன்பின்னர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாத மக்கள் விடுதலை முன்னணி, 2005 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவிற்கும், 2010 ஆம் ஆண்டு சரத் பொன்சேகாவிற்கும் 2015 ஆம் ஆண்டில் மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்கியிருந்தது.

இந்நிலையில் வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க முடிவெடுத்துள்ள மக்கள் விடுதலை முன்னணி அதன் தலைவரை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது