மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் பாரிய பிரச்சாரம் - அத்துரலிய தேரர் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, August 18, 2019

மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் பாரிய பிரச்சாரம் - அத்துரலிய தேரர்


மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தை அரசாங்கத்துக்கு சுவீகரித்துக் கொள்வதற்கு இதுவரையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லையென்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து.

நாளை (19) மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் பாரிய பிரச்சாரக் கூட்டமொன்றை நடாத்தப் போவதாக அத்துரலிய ரத்ன தேரர் அறிவித்துள்ளார்.

நாளை பிற்பல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ள இக்கூட்டம்,  இந்நாட்டிலுள்ள ஹிந்து, பௌத்த மக்கள் இணைந்து நாட்டைப் பாதுகாப்பதற்காக கட்டியெழுப்பப்பட்ட மக்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளை அழித்த,தற்கொலை குண்டுதாரிகளை உருவாக்கும் அமைப்புக்களே இந்தப் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு நிதி வழங்கியுள்ளதாகவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்காக சவுதியிலுள்ள அடிப்படைவாத நிறுவனம் 1700 கோடி ரூபாவை வழங்கியுள்ளதாக தம்மிடம் தகவல்கள் உள்ளதாகவும் தேரர் மேலும் கூறியுள்ளார்.