இலங்கையின் இறைமையில் தலையிடுவதற்கு எவருக்கும் அனுமதியளிக்கமாட்டேன் என பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பொதுஜனபெரமுனவின் மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டின் மக்கள் எதிர்கொண்டுள்ள சவால்களிற்கு தீர்வை காண்பதற்கான தலைமைத்துவத்தை வழங்குவதற்கு நான் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் எனது நாட்டின் இறைமையில் எவரும் தலையிடுவதற்கு அனுமதியளிக்கமாட்டேன் எனவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்பை முழுமையாக உறுதிசெய்வதே எனது முதல் பணி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.